‘கட்டுமான பணியில் சுவர் இடிந்து விபத்து’ கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த துயரம்!

 

‘கட்டுமான பணியில் சுவர் இடிந்து விபத்து’ கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த துயரம்!

ராஜஸ்தான் அருகே கட்டுமான பணியின் போது கட்டிடம் விழுந்து ஏற்பட்ட விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணியில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று காலை திடீரென கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில், சுவர் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 14 கூலி தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களுள் படுகாயம் அடைந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

‘கட்டுமான பணியில் சுவர் இடிந்து விபத்து’ கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த துயரம்!

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் உரிய பாதுகாப்புகள் இல்லாமல் கட்டுமான பணி நடந்ததாக தெரிய வந்ததன் பேரில், உரிமையாளர் மற்றும் கான்டிராக்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து கட்டிட விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.