சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

 

சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

உடலின் மிகப்பெரிய உறுப்பு எது என்றால் நம்முடைய சருமம்தான். உடல் முழுக்க போர்வை போல போர்த்தி நம்மை காக்கும் மிகப்பெரிய உறுப்பு. நோய்க்கிருமிகள் உள்ளே நுழைந்துவிடாமல், உடலின் வெப்பநிலையைத் தக்க வைப்பது என பல்வேறு பணிகளைச் சருமம் செய்கிறது. எனவேதான் அதன் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் நன்றாக இருக்க வேண்டியது அவசியம்.

சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

சருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்கத் தினமும் செய்ய வேண்டிய எளிய வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்!

இறந்த சரும செல்களை அகற்றுவது மிக முக்கியமான விஷயம் ஆகும். முகத்தில் மட்டுமின்றி உடலில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை மென்மையாக அகற்ற வேண்டும். குறிப்பாக முகத்தில் நாம் போடும் மேக்அப், முகத்தில் படிந்த தூசு, எண்ணெய்ப் பிசுக்கைக் கவனத்துடன் அகற்ற வேண்டாம். மிகவும் அழுத்தித் தேய்க்காமல் மென்மையாகத் தேய்த்து அகற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இயற்கையாக சருமத்தில் உண்டாகும் எண்ணெய் சுரப்பு காரணமாக சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

வெளியே தூய்மை செய்தது போன்று உடலுக்குள்ளாகவும் தூய்மை செய்ய போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இப்படி தண்ணீர் அருந்துவது சருமத்தின் அடிப்பரப்பு வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும். சருமத்துக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும்போது சருமத்தில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

மேலும் தண்ணீர் அருந்துவது சருமம் ஈரப்பதத்துடன் இருக்க செய்யும். வெயில் காலத்தில் வெப்பக் கொடுமைக்கு பயந்து பலரும் ஏசி அறைக்குள்ளே இருப்பார்கள். இதனால் தாகம் குறைவாக இருக்கும். தண்ணீர் குறைவாக குடிப்பதால் சருமம் வறண்டு பொலிவிழந்துவிடும். எனவே. ஏசி அறைக்குள் இருந்தாலும் தண்ணீர் அருந்துவதை நிறுத்தக் கூடாது.

சருமம் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். எனவே, தினசரி உணவில் வைட்டமின் சி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது சருமத்தில் நிகழும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் பாதிப்பைத் தடுத்து சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.

வெளியே செல்லும்போது மட்டுமின்றி வீட்டுக்குள் இருக்கும்போதும் கூட சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்ள வேண்டும். சன்ஸ்கிரீன் போடும்போது சூரிய ஒளி படும் பகுதிகளில் மட்டும் க்ரீம் போடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். கையின் பின்புறம், பின் கழுத்துப் பகுதிகள் கூட சூரிய ஒளி காரணமாக பாதிக்கப்படலாம், கருமை அடையலாம். எனவே, முழுமையாக சன்ஸ்கிரீன் தடவ வேண்டும்.