”பட்ஜெட் விலையில் 64 எம்பி கேமரா போன்” – டெக்னோ அறிமுகம்

 

”பட்ஜெட் விலையில் 64 எம்பி கேமரா போன்” – டெக்னோ அறிமுகம்

பட்ஜெட் விலையில் 64 மெகா பிக்சல் கேமாவுடன், தாறுமாறான சிறப்பம்சங்கள் கொண்ட போனை டெக்னோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

டெக்னோ கேமான் 16 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய போன், 64 மெகா பிக்சல் பிரதான கேமராவுடன் 2 எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், ஒரு ஏஐ லென்ஸ் என நான்கு கேமரா செட்டப்பில் வருகிறது. முன்புறத்தில் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டுள்ள இந்த போனின் திரை 6.8 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் பன்ச் ஹோல் திரையாகவும், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளிவந்துள்ளது.

”பட்ஜெட் விலையில் 64 எம்பி கேமரா போன்” – டெக்னோ அறிமுகம்

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் என சகல சூப்பர் சிறப்பம்சங்களை தாங்கி வந்துள்ளது. இந்த போனின் பேட்டரியை 2 மணிநேரத்தில முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று தெரிகிறது. இந்த போனின் மெகா பேட்டரி 29 நாட்கள் ஸ்டாண்ட் பை கொண்டது என்றும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், அதை கொண்டு 34 மணிநேரம் போன் பேசலாம் என்றும் 16 மணிநேரம் வெப் பிரவுசிங் செய்யலாம் என்றும் வீடியோ பார்ப்பதற்கு 22 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்றும் கேம்ஸ்-ஐ பொறுத்தவரை 15 மணிநேரம் வரை தொ டர்ந்து விளையாட முடியும் என்றும் பாடல்களை 180 மணிநேரம் வரை கேட்க முடியும் என டெக்னோ தெரிவித்துள்ளது.

”பட்ஜெட் விலையில் 64 எம்பி கேமரா போன்” – டெக்னோ அறிமுகம்

கிளவுட் ஒயிட் மற்றும் பியுரிஸ்ட் புளூ ஆகிய 2 விதமான வண்ணங்களில் வரும் இந்த போன், 16ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10,999 ரூபாய் ஆகும். பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு அறிமுகமாகும் இந்த போன் பட்ஜெட் வாசிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்