19 வயதுக்கு பெண்ணுக்கு கொடூரம்… உத்தர பிரதேச அரசு என்ன செய்ய போகிறது? யோகியை சாடிய பகுஜன் சமாஜ்

 

19 வயதுக்கு பெண்ணுக்கு கொடூரம்… உத்தர பிரதேச அரசு என்ன செய்ய போகிறது? யோகியை சாடிய பகுஜன் சமாஜ்

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிருக்காக போராடி கொண்டு இருப்பதை குறிப்பிட்டு அரசு என்ன செய்யப்போகிறது என யோகி ஆதித்யநாத் அரசை பகுஜன் சமாஜ் கட்சி சாடியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த சில தினங்களுக்கு முன் 19 வயது தலித் பெண் ஒருவர் தனது அம்மாவுடன் பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக வயலுக்கு சென்றுள்ளார். வயலில் புல் வெட்டி கொண்டிருந்த நிலையில் அந்த பெண் திடீரென காணவில்லை. சிறிது நேரத்துக்கு பின் தனது மகள் காணவில்லை என்ற தாய் தேடி உள்ளாள். சுமார் 100 மீட்டர் தொலைவில் தனது மகள் ஆடையில்லாமல் கிடப்பதை பார்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு அந்த பெண்ணின் நாக்கு வெட்டப்பட்டு மற்றும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த தனது மகளை ரிக்ஷாவில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.

19 வயதுக்கு பெண்ணுக்கு கொடூரம்… உத்தர பிரதேச அரசு என்ன செய்ய போகிறது? யோகியை சாடிய பகுஜன் சமாஜ்
பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக போராட்டம்

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளர் சுதிந்திரா பதோரியா இது தொடர்பாக கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையான பின்னணியில் இருந்து வரும் மக்களை அடக்குவதற்கும் , சுரண்டுவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் தபாங்ஸ் (வலிமையானவர்கள்) தங்களது பலத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நாக்கு வெட்டப்பட்டு, அவளது முதுகெலும்பு இரக்கமின்றி உடைக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்கு பெண்ணுக்கு கொடூரம்… உத்தர பிரதேச அரசு என்ன செய்ய போகிறது? யோகியை சாடிய பகுஜன் சமாஜ்
சுதிந்திரா பதோரியா

உத்தர பிரதேச அரசாங்கத்திடமிருந்தும், காவல் துறையினரிடமிருந்தும், அரசாங்கத்தை நடத்தி வரும் மக்களிடமிருந்தும் அவர்கள் இது குறித்து என்ன செய்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களை தடுக்க தீவிர நடவடிக்க எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் உத்தர பிரதேசத்தில் தலித்துகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக எதுவும் செய்யப்படவில்லை என்று நான் சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.