ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

 

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

ஈரோடு

5ஜி சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் நேற்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில், கூட்டமைப்பின் தலைவர் பழனிவேலு, ஓய்வு ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

போராட்டத்தின் போது, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கவும், 2021 ஜூன் மாத ஊதியத்தை வழங்குதல், மாதந்தோறும் கடைசி நாள் ஊதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காலி நிலங்களை விற்பதன் மூலம் பி.எஸ்.என்.எல் கடன்களை அடைக்கவும், ஓய்வூதிய மாற்றம், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பணம் கட்டுதல், லைன் பழுது சரிசெய்யும் பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.