லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க. மாநில அரசுகள்

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க. மாநில அரசுகள்

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில், லவ் ஜிஹாத்துக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதில் அம்மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக உள்ளன.

ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் பல்லப்கர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியை விட்டு வெளியே வந்த போது இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையில் லவ் ஜிஹாத் (காதலித்து கட்டாய மத மாற்றம் செய்வது) காரணமாக நடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து கடந்த சில வாரங்களாக லவ் ஜிஹாத் குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க. மாநில அரசுகள்
சிவ்ராஜ் சிங் சவுகான், யோகி ஆதித்யநாத்

குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடுமையாக கொந்தளித்தன. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக அவசர சட்டத்தை கொண்டு வந்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசும் எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் நோக்கில் மத சுதந்திர சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க. மாநில அரசுகள்
பி.எஸ். எடியூரப்பா

தற்போது கர்நாடக அரசும் இந்த பட்டியலில் இணைய உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பி.எஸ். எடியூரப்பா இது தொடர்பாக கூறுகையில், அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் லல் ஜிஹாத்துக்கு எதிரான சட்டத்தை அறிமுகம் செய்வோம் என்று தெரிவித்தார்.