கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு வெற்றி.. காங்கிரஸ் ஏமாற்றம்

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு வெற்றி.. காங்கிரஸ் ஏமாற்றம்

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான சித்தராமையா எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் மனு கொடுத்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு வெற்றி.. காங்கிரஸ் ஏமாற்றம்
முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

சட்டப்பேரவையில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு சுமார் 6 மணி நேரம் கடும் விவாதம் நடந்தது. நேற்று இரவே நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதனால் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு இன்னும் 6 மாதத்துக்கு எந்தவொரு கவலையும் இல்லை.

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு வெற்றி.. காங்கிரஸ் ஏமாற்றம்
சித்தராமையா

முன்னதாக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனைகள் இல்லை, அவர்கள் அதனை செய்யட்டும். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறையும் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்கு நான் பாதுகாப்பாக இருப்பேன் என கிண்டலாக தெரிவித்தார்.