பிரிட்டானியாவுக்கு ரூ.375 கோடி லாபம் கொடுத்த பிஸ்கட்….

 

பிரிட்டானியாவுக்கு ரூ.375 கோடி லாபம் கொடுத்த பிஸ்கட்….

பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.374.75 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 26.1 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் மொத்த லாபமாக ரூ.297.23 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

பிரிட்டானியாவுக்கு ரூ.375 கோடி லாபம் கொடுத்த பிஸ்கட்….

2020 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்தற்கு வரி செலவினம் குறைந்ததே முக்கிய காரணம். கடந்த மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.2,867.7 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரிட்டானியாவுக்கு ரூ.375 கோடி லாபம் கொடுத்த பிஸ்கட்….

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறுகையில், 9 மாதங்களாக மிதமான வளர்ச்சி கண்டு வந்த நிலையில், கடந்த காலாண்டில் முதல் 2 மாதங்களில் மீண்டும் வளர்ச்சியை காண தொடங்கினோம். பின்னர் கோவிட்-19 மற்றும் லாக்டவுன் காரணமாக மார்ச்சில் பாதிப்பு ஏற்பட்டது இதனால் வருவாய் மற்றும் நிகர லாப வளர்ச்சி 7 முதல் 10 சதவீதம் வரை பாதித்தது என தெரிவித்தார். பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2019-20ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.35 வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.