பிரேசிலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

 

பிரேசிலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

பிரேசிலில் கொரோனா தடுப்பு ஊசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இருப்பினும் இந்த நோயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது .அந்த வகையில் பிரேசிலில் கொரோனா தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இருப்பினும் அவர் இறந்ததற்கான காரணத்தை வெளியிட பிரேசில் சுகாதாரத்துறை மறுத்துவிட்டது . ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்த வருகின்றன. ஆனாலும் இந்த தடுப்பூசி சோதனை தற்போது வழக்கம் போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பிரேசிலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

தன்னார்வலர் எந்த அளவிலான தடுப்பூசி மருந்தை சோதனைக்கு எடுத்துக் கொண்டார் என்பது இன்னும் உறுதிபடத் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ‘ மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை. கொரோனா தடுப்பூசியின் சோதனை முயற்சி வழக்கம்போல் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளது.