பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பூ விற்ற சிறுவர்கள்… தி.மு.க எம்.பி முயற்சியால் ஐந்து மணி நேரத்தில் ரூ.1 லட்சம் கிடைத்தது!

பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பூ விற்ற சிறுவர்கள்… தி.மு.க எம்.பி முயற்சியால் ஐந்து மணி நேரத்தில் ரூ.1 லட்சம் கிடைத்தது!

கோவையில் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பூ விற்பனையில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு தி.மு.க எம்.பி செந்தில் குமார் முயற்சியால் நிதி உதவி கிடைத்தது.

பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பூ விற்ற சிறுவர்கள்… தி.மு.க எம்.பி முயற்சியால் ஐந்து மணி நேரத்தில் ரூ.1 லட்சம் கிடைத்தது!
கோவை அருகே மருத மலை சாலையில் சபீர் என்பவர் தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து பூ விற்பனை செய்து வந்தார். குழந்தைகள் பூக்கள் நிறைந்த கவரை சாலையில் செல்வோரிடம் ஓடி ஓடிச் சென்று விற்பனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆங்கில இணையதளத்தில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து அந்த குழந்தைகளுக்கு உதவ தி.மு.க எம்.பி செந்தில் முன் வந்தார். குழந்தைகளுக்கு 80 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. என் பங்குக்கு

பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பூ விற்ற சிறுவர்கள்… தி.மு.க எம்.பி முயற்சியால் ஐந்து மணி நேரத்தில் ரூ.1 லட்சம் கிடைத்தது!

ரூ.1000ம் குழந்தையின் தந்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். முடிந்தவர்கள் ரூ.1000 செலுத்தலாம். அதற்கான ரசீதை எனக்கு அனுப்பினால், அதை குழந்தையின் தந்தையிடம் சரி பார்த்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பேன் என்றார்.
அவர் அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் 100 பேர் குழந்தையின் பெற்றோர் வங்கிக் கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்தனர்.

http://

இது குறித்த அறிவிப்பை செந்தில் எம்.பி தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார். அதில், 80 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் தற்போது ரூ.1 லட்சம் எட்டிவிட்டது. எனவே, நன்கொடை எடுப்பதை நிறுத்துகிறோம். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு. அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
குழந்தைக்கு யாரோ ஒருவர் உதவி செய்தார் என்பதை விட அனைவரும் சேர்ந்து செய்தோம் என்று கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உதவி வேண்டும் என்று ட்விட்டர் மூலமாக தொடர்புகொண்டாலே தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில் குமார் தொடர்ந்து பலருக்கும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.