எதிர்காலத்திற்காக வைத்திருந்த 16 லட்சத்தை பப்ஜி விளையாடி இழந்த சிறுவன் : மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்து விட்ட தந்தை!

 

எதிர்காலத்திற்காக வைத்திருந்த 16 லட்சத்தை பப்ஜி விளையாடி இழந்த சிறுவன் : மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்து விட்ட தந்தை!

‘பப்ஜி’ என அழைக்கப்படும் விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் தற்கொலை, எதிர்ப்பாராதா மரணமும் இதனால் ஏற்படுகிறது.

அந்த வகையில் பஞ்சாபில் 17 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போன நிலையில் தனது அம்மா செல்போனில் நேரம் பார்க்காமல் பப்ஜி விளையாடி வந்துள்ளான். அவரின் பெற்றோர் கேட்டதற்கு ஆன்லைனில் படிப்பதாக கூறி சமாளித்துள்ளார் சிறுவன்.

ஒருகட்டத்தில் பப்ஜி கேமில் அடுத்தடுத்த லெவலை அடைய புதிய அப்கிரேடுகளை பெற தனது பெற்றோரின் வங்கி கணக்கை சிறுவன் பயன் படுத்தியதாக தெரிகிறது. இதன் மூலம் 16 லட்சத்தை சிறுவன் பப்ஜி கேம்மிற்காக செலவு செய்துள்ளான். வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்தியை சிறுவன் உடனே அழித்து விட்டதால் பெற்றோருக்கு இது குறித்து தகவல் செல்லவில்லை.

இந்நிலையில் 16 லட்சத்தை சிறுவன் செலவு செய்ததை அறிந்து அவரது தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். அரசு அலுவலரான அவர் சிறுவனின் எதிர்காலம் மற்றும் மருத்துவத்திற்காக இந்த பணத்தை சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பைக் பழுதுபார்க்கும் மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.