Home தமிழகம் நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

வேதாரண்யம் அருகே பெற்றோருக்கு உடை எடுத்து வரச்சென்ற சிறுவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நேற்று நிவர் புயல் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த வகையில், வானவன்மகாதேவி கிராமத்தில் வசித்து வந்த புண்ணியகுமார் (16), தனது பெற்றோர்களுடன் முகாமில் தங்கி இருந்தார். பெற்றோர்களுக்கு உடை கொண்டு வருவதற்காக அந்த சிறுவன், தனது நண்பர் ஒருவருடன் பலத்த மழையிலும் பைக்கில் சென்றிருக்கிறார்.

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

அச்சமயம் பலத்த காற்று வீசியதால் நிலை தடுமாறிய பைக், அப்பகுதியில் இருந்த மின்கம்பம் ஒன்றன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த புண்ணியகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் சென்ற இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல...

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- Advertisment -
TopTamilNews