விஸ்ரூபம் எடுத்த பெங்களூர் பவுலர் சிராஜ் – IPL -ல் புதிய சாதனை

 

விஸ்ரூபம் எடுத்த பெங்களூர் பவுலர் சிராஜ் – IPL -ல் புதிய சாதனை

இந்த சீசன் ஐபில் ரொம்பவே சுவாரஸ்யமாகப் போய்கொண்டிருக்கிறது. எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பலராலும் கோப்பையை வெல்லும் என நினைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. ராசி இல்லாத டீம், ஃபைனலுக்குச் செல்லக்கூட முடியாத டீம் என உதாசீனப் படுத்திய பெங்களூர் பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

விஸ்ரூபம் எடுத்த பெங்களூர் பவுலர் சிராஜ் – IPL -ல் புதிய சாதனை

நேற்று நடந்த ராயல்சேலஞ்சர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது பெங்களூர்.

கொல்கத்தா பேட்ஸ்மேன்களை 84 ரன்களில் முடக்கினர் பெங்களூர் பவுலர்கள். அதுவும் கில், திரிப்பாதி, ரானா, மோர்கன், கம்மின்ஸ் என நல்ல ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்களை எனும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. கொல்கத்தா அணியில் 9 பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்தார்கள். ஆனால், அவர்களில் ஐந்து பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் மோர்கன் எடுத்த 30 ரன்களே அதிகபட்ச ரன்கள்.

விஸ்ரூபம் எடுத்த பெங்களூர் பவுலர் சிராஜ் – IPL -ல் புதிய சாதனை

இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் பத்துப் போட்டிகளில் ஆடினாலும், ஃபாஸ்ட் பவுலர் முகம்மது சிராஜ்க்கு நான்கு போட்டிகளில் ஆடவே வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும், அவற்றில் தனது சிறப்பான பங்களிப்பைச் செலுத்தினார் சிராஜ்.

டெல்லியுடன் மோதிய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கொல்கத்தாவுடனான முதல் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைப் பறித்தார். பஞ்சாப் அணியோடு மோதிய போட்டியில் 3 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்க வில்லை.

விஸ்ரூபம் எடுத்த பெங்களூர் பவுலர் சிராஜ் – IPL -ல் புதிய சாதனை

நேற்றைய போட்டியில் விஸ்ரூபம் எடுத்தார் முகம்மது சிராஜ். 4 ஓவர்கள் வீசி, 8 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த விகிதத்தில் இனி ஒருவர் பந்து வீசுவது பெரும் சவாலான விஷயம்.

இதைவிடவும் ஐபிஎலில் புதிய சாதனையையும் பதிய வைத்திருக்கிறார் சிராஜ். இதுவரை 12 ஐபிஎல் தொடர் முடிந்திருக்கிறது. தற்போது நடைபெறுவது 13 வது சீசன். இத்தனை போட்டிகளில் எந்தவொரு பவுலரும் ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்களை வீசியதே இல்லை. நேற்றைய போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் ஓவர்களில் ஒரு ரன்கூட கொடுக்காமல் மெய்டன் ஓவர்களாக வீசினார் சிராஜ். இதன்மூலம் ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய சாதனையைச் சூடிக்கொள்கிறார் சிராஜ்.

விஸ்ரூபம் எடுத்த பெங்களூர் பவுலர் சிராஜ் – IPL -ல் புதிய சாதனை

ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்களை வீசியிருப்பவர் பிரவின் குமார் இவர் 14 மெய்டன் ஓவர்களையும் இரண்டாம் இடத்தில் உள்ள இர்ஃபான் பதான் 10 மெய்டன் ஓவர்களையும், மூன்றாம் இடத்தில் உள்ள குல்கர்னி 8 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளனர்.