ஊரடங்கு காலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு

 

ஊரடங்கு காலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தும் வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு

ஊரடங்கு காலத்தில் குழந்தை பிறப்பு குறைந்தது. சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 7,030 குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 4,094 குழந்தைகள் பிறப்பு மட்டுமே பதிவாகி உள்ளன. 2020ஐ விட இந்த ஆண்டு 42% குழந்தை பிறப்பு சரிந்துள்ளது.