‘அத்துமீறும் சீன ராணுவம்’.. சீனாவுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

‘அத்துமீறும் சீன ராணுவம்’.. சீனாவுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்திய-சீன எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியது தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

சமீபத்தில் இந்தியாவின் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம், சீனப்படையை விரட்டி அடித்ததாகவும் கூறப்பட்டது. இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுவதால், ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘அத்துமீறும் சீன ராணுவம்’.. சீனாவுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

இதனைத்தொடர்ந்து கடந்த 29 மற்றும் 30 ஆம் தேதி சீன ராணுவம் மீண்டும், பாங்காக் ஏரி பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே நடைபெற்ற தாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டும், மீண்டும் சீனப்படை அத்துமீறுவதால், பிரிகேடியர் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

‘அத்துமீறும் சீன ராணுவம்’.. சீனாவுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்த நிலையில், எல்லை பிரச்னை குறித்து இந்திய-சீனா இடையே இன்று படைப்பிரிவு தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பாங்காக் ஏரி பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறிய பிரச்னையை பேசி தீர்க்க பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது.