நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதித்தபோது அது புரளி என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் எங்கிருந்து பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்த போது அவர், மரக்காணத்தைச் சேர்ந்த நபர் என தெரிய வந்தது. இதனையடுத்து மரக்காணம் போலீசாருக்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்து விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் நடிகர் சூர்யாவின் அலுவலகம், விஜய்காந்த் வீடு மற்றும் தனுஷ் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதேபோல் சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.