நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

 

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வர் என்பதும் தெரியவந்தது புவனேஸ்வர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இதற்கு முன்னர் பல முறை இப்படி தொலைபேசி செய்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.