கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டை சாப்பிடுவது நல்லதா… கெட்டதா?

 

கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டை சாப்பிடுவது நல்லதா… கெட்டதா?

முட்டை, நம்முடைய அன்றாட உணவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. இதில் புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின் டி, வைட்டமின் இ, வைட்டமின் கே, வைட்டமின் பி5, கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

முட்டையை பொடிமாஸ், ஆம்ளேட், வேகவைத்து எடுத்துக்கொள்வது, ஆஃப் பாயிலாக சாப்பிடுவது என்று விதவிதமாக சாப்பிடுகிறோம். கர்ப்பகாலத்தில் வேகவைத்த முட்டையை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. இது நல்லதா, கெட்டதா என்ற குழப்பமும் உள்ளது. இதுபற்றி இங்கு காண்போம்.

கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டை சாப்பிடுவது நல்லதா… கெட்டதா?

வேகவைத்த முட்டை மிகவும் பாதுகாப்பானது. குறைந்த கலோரியும் அதிக ஊட்டச்சத்தும் கொண்டது. ஒரு முட்டையில் ஆறு கிராம் அளவுக்கு உயர்தர புரதச் சத்து கிடைக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலைன் என்ற வைட்டமின் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக உள்ளது.

எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் வேகவைத்த முட்டையை எடுத்துக்கொள்வது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் கூட. தாய் – சேய் என இருவருக்கும் தேவையான ஊட்டச்சத்தை முட்டை வழங்கிவிடுகிறது. எனவே, தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டையை சாப்பிடலாம். தாயின் கொலஸ்டிரால் அளவைப் பொறுத்து இதை முடிவு செய்துகொள்வது நல்லது.

முட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து குழந்தையின் நுரையீரல், சிறுநீரகம், இதயம், கண்கள் மற்றும் இதர முக்கிய உள் உறுப்புகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைய அவசியமாக தேவைப்படும்.

குழந்தைக்குத் தேவையான புரதச்சத்து கிடைப்பதை முட்டை உறுதி செய்யும். இது மூளை வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கும். மேலும் இதர சத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பது குழந்தைக்கு எதிர்காலத்தில் வேறு சில உடல்நலக் குறைவுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

முட்டை பொடிமாஸ், ஆஃப் பாயில், ஆம்ப்ளேட் உள்ளிட்டவற்றை விட வேக வைத்த முட்டை சாப்பிடுவதே நல்லது.

முட்டையில் கெட்ட பாக்டீரியா, நுண் கிருமிகள் இருக்கலாம். வேக வைக்கும்போது மட்டுமே இவை அழிக்கப்படும்.