எந்த கலர் மேல வரும்… தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜகவின் முக்கிய புள்ளி!

 

எந்த கலர் மேல வரும்… தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜகவின் முக்கிய புள்ளி!

பாஜககாரர்கள் என்றாலே எப்போதுமே எல்லா விசயங்களையும் சற்று வித்தியாசமாக செய்யக் கூடியவர்கள் என்பது ஊரறிந்த உண்மை. அதேபோல எதோ ஒன்றை கூறிவிட்டு, அப்படியே பிளேட்டை தலைகீழாக மாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள். ஆனால், இம்முறை பாஜக கட்சியின் முக்கியப் புள்ளி தேசியக் கொடியை தலைகீழாக திருப்பியிருக்கிறார்.

நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடியரசு தினத்தின்போதும் ஒருசில கட்சிகள் தங்களது கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி ‘மரியாதை’ செய்வது வழக்கம். பாஜகவும் தேசியக் கொடி ஏற்றும் என்ற உண்மை நேற்று தான் தெரிந்தது.

எந்த கலர் மேல வரும்… தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜகவின் முக்கிய புள்ளி!

மேற்கு வங்க மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கலந்துகொண்டு பெருமிதமாக கொடியேற்றினார். அவர் ஏற்றிய பிறகு தான் தெரிந்தது அந்தக் கோடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது என்று.

விழாவில் பங்கேற்ற ‘தேசப் பற்றாளர்’ ஒருவர் இதை சரியாக கண்டுணர்ந்து சொல்ல, உடனே கொடியை கீழிறக்கினார் கோஷ். அதன்பின், கொடியை சரியாக ஏற்றினார். தர்மசங்கடத்துக்கு ஆளாகிப்போன கோஷ், “கொடியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தலைகீழாக ஏற்றவில்லை.

தவறுதலாக கட்டப்பட்டிருந்ததை கவனிக்காமல் நானும் அப்படியே ஏற்றிவிட்டேன். தவறுதலாக கட்டியவர்களை எச்சரித்திருக்கிறேன். இனி இதுபோன்று தவறு நடக்காது” என்றார்.

எந்த கலர் மேல வரும்… தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜகவின் முக்கிய புள்ளி!

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். இந்த விவகாரம் வேறு அவர்கள் கையில் சிக்கியது. தேசியக் கொடியைக் கூட ஏற்ற தெரியாமல், எப்படி தான் நாட்டை ஆள்கிறார்களோ என்று கூறி சிறப்பாக விழாவை நடத்திமுடித்து விட்டார்கள்.

90s கிட்ஸ்கள் சிறு வயதில் கொடி குத்தும்போது எந்த வண்ணம் மேலே வரும் என்று ஒரு பெரிய விவாதமே அவர்களுக்குள் நடைபெறும். அந்த பால்ய நினைவுகளை திலீப் கோஷ் மீட்டெடுத்துள்ளார். அவருக்கும் பாஜகவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளவர்கள் 90s கிட்ஸ்கள்!