9 மாதங்களுக்கு பிறகு ஜே.பி. நட்டாவுக்கு புதிய குழு…. பா.ஜ.க.வில் மத்திய குழுவில் அதிரடி மாற்றம்.. மோடி வாழ்த்து

 

9 மாதங்களுக்கு பிறகு ஜே.பி. நட்டாவுக்கு புதிய குழு…. பா.ஜ.க.வில் மத்திய குழுவில் அதிரடி மாற்றம்.. மோடி வாழ்த்து

பா.ஜ.க. நேற்று மத்திய குழுவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது. இந்த குழு கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. அதில், மகாராஷ்ராவிலிருந்து பங்கஜ் முண்டே மற்றும் வினோத் தவ்தே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா கடந்த ஜனவரியில் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து பா.ஜ.க.வின் மத்திய குழுவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 9 மாதங்களாக அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்தநிலையில் நேற்று பா.ஜ.க.வின் புதிய மத்திய குழு நிர்வாகிகள் பட்டியலை ( துணை தலைவர்கள், பொது செயலாளாகள், தேசிய செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்பட) ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்டார்.

9 மாதங்களுக்கு பிறகு ஜே.பி. நட்டாவுக்கு புதிய குழு…. பா.ஜ.க.வில் மத்திய குழுவில் அதிரடி மாற்றம்.. மோடி வாழ்த்து
பங்கஜ் முண்டே

பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர்களின் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிவ்ராஜ் சிங் சவுகான், உமா பாரதி, பிரதாப் ஜா, வினய் சஹஸ்ரபுத்தே, ஷியாம் ஜாஜூ மற்றும் அவினாஷ் ராய் கண்ணா ஆகியொருக்கு பதிலாக ரேஹா வர்மா, அன்னபூர்னா தேவி, அப்துல்லா குட்டி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9 மாதங்களுக்கு பிறகு ஜே.பி. நட்டாவுக்கு புதிய குழு…. பா.ஜ.க.வில் மத்திய குழுவில் அதிரடி மாற்றம்.. மோடி வாழ்த்து
பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர்கள் பட்டியலில் பூபேந்திர யாதவ், அருண் சிங் மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோரை தவிர மற்றவர்கள் அனைவரும் புதிய முகங்களாக இடம் பெற்றுள்ளனர். ராம் மாதவ், முரளிதர் ராவ், சரோஜ் பாண்டே மற்றும் அனில் ஜெயின் போன்ற பெரிய தலைகளின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவராக இருந்த துஷயந்த் குமார் தேசிய பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டு்ளளார். தேசிய செயலாளர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவிலிருந்து பங்கஜ் முண்டே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வின் புதிய மத்திய குழு நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.