கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

 

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினருக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 10 தொகுதிகளிலும் பதிவான, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று பாஜகவினர், அந்த கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில், தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும், குறுகிய இடத்தில் தங்கியிருப்பதால், கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

எனவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். மேலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளதாக கூறிய அவர், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.