‘முதல்வர் வேட்பாளரை பாஜக தான் அறிவிக்கும்’ : எல்.முருகன் திட்டவட்டம்!

 

‘முதல்வர் வேட்பாளரை பாஜக தான் அறிவிக்கும்’ : எல்.முருகன் திட்டவட்டம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது, நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக – பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று அறிவித்தார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது உறுதியானது.

‘முதல்வர் வேட்பாளரை பாஜக தான் அறிவிக்கும்’ : எல்.முருகன் திட்டவட்டம்!

இருப்பினும், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக இரு கட்சியினருக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதல்வர் வேட்பாளரை பாஜக தான் அறிவிக்கும் என்று எல்.முருகன் தெரிவித்திருந்தார். பல சர்ச்சைகளுக்கிடையே முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முருகனின் இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. முருகனின் கருத்துக்கு அவர்கள் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை தான் அறிவிக்கும் என எல்.முருகன் திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்திருக்கிறார். மேலும், அமைச்சர்கள் மீது திமுக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.