“துக்கடா வானதி”??? கமலின் அநாகரிக விமர்சனம்; கொந்தளித்த பாஜக

 

“துக்கடா வானதி”??? கமலின் அநாகரிக விமர்சனம்; கொந்தளித்த பாஜக

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். சமீபத்தில் வானதியை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , இந்த தொகுதியை பற்றி கமலுக்கு என்ன தெரியும்? இங்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து வானதி சீனிவாசனுடன் கமல் விவாதம் செய்யத் தயாரா ? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், வானதி சீனிவாசனுடன் விவாதிக்க அழைக்கிறார் பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. முதலில் மோடி மற்றும் அமைச்சர்களுடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். பிறகு வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதிக்கலாம் என்று கூறியிருந்தது.

“துக்கடா வானதி”??? கமலின் அநாகரிக விமர்சனம்; கொந்தளித்த பாஜக

இந்நிலையில் பாஜக கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், “கமல் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை வானதி சீனிவாசனுடன் நடத்தவேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்னதற்கு, என்னை துக்கடா வானதி என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.நான் கோவை தெற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் பிறந்து அரசாங்க பள்ளியில் படித்து , வழக்கறிஞர் தொழில் செய்துள்ளேன். எனக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளது. நான் மக்களுக்கான சேவையில் உள்ளேன். கடந்த ஐந்து வருடங்களாக இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்துள்ளேன் என்பது இன் சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்தால் உங்களுக்கு தெரியும். என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரும்போது இப்படி தான் கேவலப்படுவார்களா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இந்த கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு பெண்களும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னேறி வருகிறார்கள். இப்படி முன்னேறி பொதுவாழ்க்கைக்கு வரக்கூடிய பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இது தான் என்று சொன்னால் பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா ? மக்கள் நீதி மய்யமும், கமலும் பதில் சொல்ல வேண்டும் ” என்று கூறியுள்ளார்.