பாஜகவின் ‘அடுத்த ஸ்கெட்ச்’.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்!

 

பாஜகவின் ‘அடுத்த ஸ்கெட்ச்’.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்!

நாடெங்கிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் பரந்து கிடக்கிறது. ஆனால், தென் தமிழகத்தில் காலூன்ற எண்ணும் பாஜகவின் கணக்கு இதுவரையில் பகல் கனவாகவே இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தை தன்வசம் கொண்டு வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. என்ன தான் ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் முற்றிலுமாக வேறுபடுவதால் அவ்வப்போது அதிமுக- பாஜகவுமே முட்டிக் கொள்கின்றன.

பாஜகவின் ‘அடுத்த ஸ்கெட்ச்’.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்!

இந்த நிலையில் தமிழகத்தை தன் வசம் கொண்டு வர பாஜக தலைமை ஒரு சில அசைன்மென்ட்டுகளை கொடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதியில்,10 தொகுதியிலாவது வென்று விட வேண்டுமென்பது பாஜக தலைமையின் முதல் கண்டிஷன். முதலில் அதிமுக பாஜகவுக்கு 5 தொகுதிகள் தான் கொடுக்க முன்வந்ததாம். அமித்ஷா வெகு நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் 20 சீட் கொடுக்க எடப்பாடி முன்வந்தாராம். இதனால், 10 இடங்களிலாவது வென்று காட்ட வேண்டுமென மும்முரமாக களப்பணியாற்றி வருகிறதாம் பாஜக.

பாஜகவின் ‘அடுத்த ஸ்கெட்ச்’.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்!

அதிமுக கூட்டணியின் ஒத்துழைப்பை நல்குவது அடுத்த கண்டிஷன். அதிமுக – பாஜக இடையே பல சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் கூட்டணி என்று வந்து விட்டால் இரண்டு கட்சியும் ஒன்றுபட்டு விடும். இவ்வாறு இருக்கும் சூழலில், அதிமுகவுடன் எந்த பிரச்னை இருந்தாலும் அதை உடனே பேசித் தீர்த்துக் கொண்டு சுமுகமாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என சொல்லியிருக்கிறதாம். அடுத்த டார்கெட் திமுக தானாம்.

பாஜகவின் ‘அடுத்த ஸ்கெட்ச்’.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்!

திமுக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. மூத்த நிர்வாகிகள் சிலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. அதனால், அதிருப்தியில் இருப்பவர்களை தட்டி தூக்க உத்தரவிட்டுள்ளதாம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் என எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை பாஜக பக்கம் இழுத்து பதவிகளை கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளதாம் பாஜக தலைமை. அதிமுகவை சேர்த்து தான்…

பாஜகவின் இந்த பிளானை அறிந்த அரசியல் கட்சிகள் ஆடிப்போய் இருக்கின்றதாம். வழக்கமாக தேர்தல் முடிந்து, ஆட்சியை பிடித்த பிறகு தான் பாஜக ஆட்டத்தை ஆரம்பிக்கும். ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன்னரே ஆட்டத்தை ஆரம்பித்திருப்பதால் பிற கட்சியினர் வயிற்றில் புளியை கரைக்கச் செய்துள்ளதாம்..!