இதுலலாம் அரசியல் செய்வது கேவலம்… கொந்தளித்த பாஜக பிரமுகர்!

 

இதுலலாம் அரசியல் செய்வது கேவலம்… கொந்தளித்த பாஜக பிரமுகர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்து அரசியல் களம் சற்று தணிந்துள்ளது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அதை கண்காணித்து வருகின்றனர்.

இதுலலாம் அரசியல் செய்வது கேவலம்… கொந்தளித்த பாஜக பிரமுகர்!

அண்மையில், வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் நடமாட்டம் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இரவு நேரங்களில் லாரிகள் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். பாஜகவுடன் சேர்ந்து அதிமுக பெட்டி மாற்றம் உள்ளிட்ட குளறுபடிகளை செய்ய மறைமுகமாக திட்டம் தீட்டி வருவதாகவும் திமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுலலாம் அரசியல் செய்வது கேவலம்… கொந்தளித்த பாஜக பிரமுகர்!

இந்த நிலையில், தோல்வி பயத்தினால் திமுக அந்த புகாரை அளித்திருப்பதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ். பி செல்வம் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக வேட்பாளர்கள் சட்டமன்றத்துக்கு செல்வார்கள். கொரனோ தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதற்காக பாஜக விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது என்று கூறினார். மேலும், தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி விவேக்கின் மரணத்தை வைத்து சிலர் அரசியல் செய்வது கேவலமான செயல் என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.