தேமுதிக இடங்களை பெற அதிமுகவுக்கு அழுத்தம்? – எல்.முருகனின் ‘அடேங்கப்பா’ விளக்கம்!

தேமுதிக இடங்களை பெற அதிமுகவுக்கு அழுத்தம்? – எல்.முருகனின் ‘அடேங்கப்பா’ விளக்கம்!

நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டை அதிமுக முடித்தது. ஆரம்பத்தில் 60 தொகுதிகளில் நின்ற பாஜக, 40க்கு வந்து கடைசியில் 20க்கு ஒப்புக்கொண்டது. இதனால் பாஜக தலைவர்கள் ஒருவித கலக்கத்திலேயே இருந்தனர். இதைக் கொண்டு சமூக வலைதளங்களிலும் பாஜகவை விமர்சித்து வந்தனர். பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்காததற்கு தேமுதிகவையே அதிமுக காரணம் காட்டிவந்தது.

தேமுதிக இடங்களை பெற அதிமுகவுக்கு அழுத்தம்? – எல்.முருகனின் ‘அடேங்கப்பா’ விளக்கம்!

இச்சூழலில் அதிமுகவுடனான கூட்டணியை நேற்று தேமுதிக முறித்துக்கொண்டது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பாஜக அவர்களுக்கு ஒதுக்கவிருந்த இடங்களை எங்களுக்கு ஒதுக்குங்கள் என அதிமுகவை வலியுறுத்திவருவதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து யாரும் மூச்சும் விடவில்லை. குறிப்பாக செய்தியாளர்களைச் சந்திக்கும் பாஜக தலைவர்கள் இதுகுறித்த கேள்விக்கான பதிலை தலையைச் சுற்றி மூக்கை தொடும் பாணியிலேயே சொல்லிவருகின்றனர்.

தேமுதிக இடங்களை பெற அதிமுகவுக்கு அழுத்தம்? – எல்.முருகனின் ‘அடேங்கப்பா’ விளக்கம்!

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் இதுதொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இதுதொடர்பாக தேசியத் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதைப் பின்பற்றுவோம். இன்னும் இது குறித்து எங்களுக்குத் தகவல் வரவில்லை” என்ற அடடே விளக்கத்தைக் கொடுத்தார். நெருப்பில்லாமல் புகையாது என்பது போல் இவர்கள் தரப்பில் அழுத்தம் கொடுத்ததால் தான் அப்படியொரு தகவல் கசிந்திருக்கிறது. இதை நேரடியாக மறுக்காமல் அதிமுக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை மறைமுகமாகவே உணர்த்திவருகின்றனர்.