55 வருஷமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் எங்களை குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கு… காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

55 வருஷமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் எங்களை குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கு… காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது கட்சி மற்றும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சி முடிவடையததால் மாநிலங்களவைத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு மோடி அழுத்தம் கொடுப்பதாகவும், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும், இன்னும் எத்தனை காலத்துக்கு குதிரை பேர அரசியலை பா.ஜ.க நடத்தும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பினார்.

55 வருஷமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் எங்களை குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கு… காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் தங்களது ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அரசாங்கத்தை சீர்குலைக்க எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊழல் தடுப்பு பிரிவில் ராஜஸ்தான் சட்டப்பேரவையின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி புகார் கொடுத்தார்.

55 வருஷமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் எங்களை குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கு… காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

இந்நிலையில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு ராஜஸ்தான் பா.ஜ.க., எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் என சவால் விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் சதிஷ் பூனியா கூறுகையில், காங்கிரஸ் தனது தோல்விகளை மறைக்க கட்சி மீது அழுத்தம் கொடுக்கிறது. 55 ஆண்டுகளாக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களிடம் உள் வேறுபாடுகள் உள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும் என தெரிவித்தார்.