பா.ஜ.க., பா.ம.க., ஒருபக்கம், காங்.,அ.ம.மு.க ஒரு பக்கம் – வருகிறது 3,4 வது கூட்டணி?

பா.ஜ.க., பா.ம.க., ஒருபக்கம், காங்.,அ.ம.மு.க ஒரு பக்கம் – வருகிறது 3,4 வது கூட்டணி?

By subas Chandra bose
வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல், இதுவரை இல்லாத அளவுக்கு படு விறு,விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கப்போவது கூட்டணிக் கட்சிகள்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பா.ஜ.க., பா.ம.க., ஒருபக்கம், காங்.,அ.ம.மு.க ஒரு பக்கம் – வருகிறது 3,4 வது கூட்டணி?

இந்த தேர்தலில் 3-வது கூட்டணி அமைந்து விடக்கூடாது என்றும் தனியாக தேர்தலை சந்திப்பது என்றும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு வேலைகள் செய்து வருகிறார்கள். இதில் அதிமுகவிடம் பாஜக தனக்கு 60 தொகுதிகள் கேட்டு வருகிறது ஆனால் அதிமுக வோ அதற்கு 30 சீட்டுகள் கூட தரத் தயாராக இல்லை. இதனால் பாஜக தனது பலத்தை வெளியுலகிற்கு காட்ட முடியாது என டெல்லி மேலிடம் கருதுகிறது.

பா.ஜ.க., பா.ம.க., ஒருபக்கம், காங்.,அ.ம.மு.க ஒரு பக்கம் – வருகிறது 3,4 வது கூட்டணி?

இந்த நிலையில் பீகாரில் பாஜக. பெற்ற வெற்றி புதிய வியூகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏன் 3 வது அணி ஒன்றை தமிழகத்தில் உருவாக்க கூடாது என டெல்லி பாஜக நினைக்கிறது.பா.ம.க..அல்லது விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் தே.மு.தி.க போன்ற கட்சிகளைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு போட்டியிடலாமா? என ஆலோசித்து வருகிறார்கள். திரை மறைவில் ரஜினியை அழைக்கும் திட்டமும் டெல்லி பாஜகவிடம் இருக்கிறது.

பா.ஜ.க., பா.ம.க., ஒருபக்கம், காங்.,அ.ம.மு.க ஒரு பக்கம் – வருகிறது 3,4 வது கூட்டணி?

இதற்கிடையே பீகாரில் காங்கிரஸ் பெற்ற படு தோல்வி திமுகவை அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. தமிழகத்திலும், பீகாரைப் போல் காங்கிரசுக்கு அத்தனை செல்வாக்கு இல்லை எனக் கருதும் திமுக காங்கிரசுக்கு மிகக் குறைவான தொகுதிகளையே ஒதுக்கித் தர திட்டமிட்டுள்ளது. இதனையறிந்த தமிழ காங்கிரஸ் தலைவர் அழகிரி டெல்லி மேலிடத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச தொகுதிகளை திமுக ஒதுக்கும் பட்சத்தில் புதிய கூட்டணி அமைப்பதே மேல் என காங்கிரஸ் கருதுகிறது. அ.ம.முக. பா.ம.கவை அழைக்கலாமா? என ஆலோசித்து வருகிறார்கள்..

பா.ஜ.க., பா.ம.க., ஒருபக்கம், காங்.,அ.ம.மு.க ஒரு பக்கம் – வருகிறது 3,4 வது கூட்டணி?

கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தையும் சேர்த்துக் கொள்லாம் என கருதுக்கள் சொல்லப்பட்டு இருக்கிறது . எனவே காங்கிரசும் இந்த தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை அமைக்கலாம்.
ஓட்டுக்களை பிரிப்பதன் மூலம் தங்கள் கட்சி வெற்றி வாய்ப்பை பெற முடியும் என இரு தேசியக் கட்சிகளுமே முடிவெடுத்து இத்தகைய புதிய கூட்டணி அமைக்க முயசிற்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.