மோடி 2ம் முறை பதவியேற்றதன் ஓராண்டு நிறைவு! – ஒரு மாதம் கொண்டாட பா.ஜ.க திட்டம்

 

மோடி 2ம் முறை பதவியேற்றதன் ஓராண்டு நிறைவு! – ஒரு மாதம் கொண்டாட பா.ஜ.க திட்டம்

மோடி 2ம் முறையாக பிரதமராக பதவியேற்றதன் முதலாமாண்டு நிறைவு விழாவை ஒரு மாதத்துக்கு கொண்டாட நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க-வினர் திட்டம்தீட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று சேரவில்லை. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் உணவின்றி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தாய் இறந்தது கூட தெரியாமல் பச்சிளம் குழந்தைகள் தாயின் உடல் மீது விளையாடும் வீடியோ கண்ணீரை வர வைக்கிறது. மக்களுக்கு நிதி உதவி செய்யுங்கள், அவர்கள் சொந்த ஊர் திரும்ப போதுமான வசதிகளை செய்து தாருங்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன.

மோடி 2ம் முறை பதவியேற்றதன் ஓராண்டு நிறைவு! – ஒரு மாதம் கொண்டாட பா.ஜ.க திட்டம்

ஆனால், எல்லா மக்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுவிட்டது, மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளனர். விவசாயிகள் கையில் பணம் சென்று சேர்ந்துவிட்டது சட்டமன்ற தேர்தல் இப்போது வந்தாலும் பா.ஜ.க ஆட்சியை பிடித்துவிடும் என்று பேசி வருகின்றனர் பா.ஜ.க-வினர்.
இந்த நிலையில் மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்ததின் முதலாமாண்டு நிறைவைக் கொண்டாட பா.ஜ.க தலைவர்கள் தயாராகி வருகின்றனர். ஆடம்பரமின்றி, எளிய முறையில் கொண்டாட பா.ஜ.க தலைமை அறிவுறுத்திய நிலையில் நாடு முழுவதும் ஒரு மாத கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மோடி 2ம் முறை பதவியேற்றதன் ஓராண்டு நிறைவு! – ஒரு மாதம் கொண்டாட பா.ஜ.க திட்டம்
இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் கூறுகையில், “கொரோனா தடுப்புப் பணியில் பா.ஜ.க தொண்டர்கள் செயலாற்றி வருகின்றனர். கட்சியின் 909 நிர்வாக மாவட்டங்களில் இவர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். உணவு தவிர்த்து ஐந்து கோடி மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது ஆப் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மோடி 2.0 அரசின் முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் டிஜிட்டல் ரேலி நடத்தப்படும். பா.ஜ.க தலைவர் நட்டா ஃபேஸ்புக் லைவ் மூலம் தொண்டர்களிடம் பேசுவார். தற்சாற்பு இந்தியா என்ற பிரதமரின் கருத்தை வலியுறுத்தும் கடிதத்துடன் தொண்டர்கள் மக்களை சந்திப்பார்கள். ஒரு மாதம் வரை இந்த கொண்டாட்டம் தொடரும்” என்றார்.