‘போலிஸ் கஸ்டடியில் நடந்த இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்’ ஹெச்.ராஜா ஆவேசம்!

 

‘போலிஸ் கஸ்டடியில் நடந்த இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்’ ஹெச்.ராஜா ஆவேசம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருப்பவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். கடந்த 19-ம் தேதி ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகளை யாரேனும் திறந்திருக்கிறார்களா என்று பார்க்கச் சென்றனர் காவல் துறையினர். ஜெயராஜின் கடை திறந்திருந்தது. அதுவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடச் சில நிமிடங்களே ஆகியிருந்தது.

‘போலிஸ் கஸ்டடியில் நடந்த இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்’ ஹெச்.ராஜா ஆவேசம்!

இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்றாலும் அது பலன் அளிக்காமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது.

இந்தப் பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர், தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.