அதிருப்தியில் அதிமுக : தமிழக வருகையை புறக்கணித்தார் நட்டா?!

 

அதிருப்தியில் அதிமுக :  தமிழக வருகையை புறக்கணித்தார் நட்டா?!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிருப்தியில் அதிமுக :  தமிழக வருகையை புறக்கணித்தார் நட்டா?!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமக 23, பாஜக 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது.

அதிருப்தியில் அதிமுக :  தமிழக வருகையை புறக்கணித்தார் நட்டா?!

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் வேலூர் மற்றும் தஞ்சாவூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூரில் நாளையும் , தஞ்சையில் நாளை மறுநாளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார். ஆனால் அவரது வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குமரி மக்களவை இடைதேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நேற்று பரப்புரை மேற்கொண்டார். அத்துடன் அவர் வீடு வீட சென்று பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் தமிழக தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவின் முக்கிய தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறதாம். இதனால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வருகிறது. ஆனால் அதற்குள்பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நட்டா வருகை ரத்தாகியுள்ளது பாஜகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.