மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து 2வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மம்தாவுக்கு தற்போது பா.ஜ.க. பெரிய போட்டியாக உருவாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு
எம்.பி. ஜான் பார்லா

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் எலியும், பூனையுமாக உள்ளனர். இரண்டு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். தற்போது இந்த சண்டை புதிய உச்சத்தை எட்டியுள்ளது போல் தெரிகிறது. கடந்த புதன்கிழமையன்று பா.ஜ.க. எம்.பி. ஜான் பார்லா மற்றும் எம்.எல்.ஏ. மனோஜ் டிக்கா ஆகியோர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிர்பாரா சென்று கொண்டு இருந்தனர். டால்மோரின் தேயிலை கார்டன் பகுதியில் சென்று கொண்டியிருந்தபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ்

பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் உள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சுவுமித்ரா கான் கூறுகையில், பா.ஜ.க. தலைவர்கள் கட்சி நிகழ்ச்சிக்கு செல்லும்போது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தின் விவகாரம் ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்பட வேண்டும் என்பது போல் உள்ளது. இருப்பினும் குறைந்தபட்சம் 144வது பிரிவை விதிக்க வேண்டும் என நாங்கள் கோருவோம். மேற்கு வங்கத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி என தெரிவித்தார்.