உ.பி., மேற்கு வங்கத்தில் நாங்கள் வெற்றி பெற அவர் உதவுவார்… அசாதுதீன் ஓவைசியை கிண்டல் அடித்த பா.ஜ.க. எம்.பி.

உ.பி., மேற்கு வங்கத்தில் நாங்கள் வெற்றி பெற அவர் உதவுவார்… அசாதுதீன் ஓவைசியை கிண்டல் அடித்த பா.ஜ.க. எம்.பி.

உத்தர பிரதேசத்திலும், மேற்கு வங்கத்திலும் நாங்கள் வெற்றி பெற அவர் உதவுவார் என்று அசாதுதீன் ஓவைசியை பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மஹராஜ் கிண்டல் அடித்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தற்போது நாடு முழுவதும் தனது தடத்தை பதிக்க தொடங்கியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்து பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி 5 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம் என்று அசாதுதீன் ஓவைசி கடந்த மாதம் அறிவித்தார்.

உ.பி., மேற்கு வங்கத்தில் நாங்கள் வெற்றி பெற அவர் உதவுவார்… அசாதுதீன் ஓவைசியை கிண்டல் அடித்த பா.ஜ.க. எம்.பி.
அசாதுதீன் ஓவைசி

இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, அடுத்த ஆண்டு நடைபெற சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்குவது குறித்து பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மஹராஜிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சாக்ஷி மஹராஜ் பதிலளிக்கையில், இது கடவுளின் கருணை. அவருக்கு கடவுள் பலத்தை கொடுக்க வேண்டும். பீகாரில் நாங்கள் வெற்றி பெற அவர் உதவினார். உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் நாங்கள் வெற்றி பெற அவர் உதவுவார் என்று கிண்டலாக பதில் அளித்தார்.

உ.பி., மேற்கு வங்கத்தில் நாங்கள் வெற்றி பெற அவர் உதவுவார்… அசாதுதீன் ஓவைசியை கிண்டல் அடித்த பா.ஜ.க. எம்.பி.
சவுகதா ராய்

பீகாரில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட்டதால் முஸ்லிம் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு செல்லாமல் சிதறியதால் பா.ஜ.க. வென்றதாக பேசப்படுகிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி மேற்கு வங்கத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் கூறுகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பா.ஜ.க.வின் பினாமி தவிர வேறில்லை. அவர் (அசாதுதீன் ஓவைசி) அப்பாஸ் சித்திக் உடன் உறவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. வங்கத்தில் முஸ்லிம்கள் மம்தா பானர்ஜியுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்று தெரிவித்தார்.