அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்.. பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை

 

அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்.. பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானான மாறும் என்று பா.ஜ.க. எம்.பி. கே.ஜே. அல்போன்ஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ஜே. அல்போன்ஸ் கூறியதாவது: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தீவிரவாதத்துக்கு தீவிரமாக பங்களிக்கின்றன. கேரளாவில் குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் சில பகுதிகளில் தலிபானிஸ்ஷம் நடக்கிறது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்.. பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை
இடது ஜனநாயக முன்னணி

கேரள மாநிலம் பாலாவில் கடந்த 9ம் தேதியன்று ஒரு தேவாலயத்தில் பக்தர்கள் மத்தியில் பிஷப் கல்லரங்கட் உரையாற்றுகையில், மாநிலத்தில் இளம் பெண்கள் பெரும்பாலும் காதல் மற்றும் போதைப்பொருள் ஹிஹாத்துக்கு பலியாகி வருகின்றனர். இந்த தந்திரங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை அழிக்க பயன்படுத்தப்படுகின்றன. போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து இருப்பது போதைப்பொருளின் தாக்கத்தால் முஸ்லிம் இல்லாத இளைஞரின் வாழ்க்கை அழிக்கப்படும் போதைப்பொருள் ஜிஹாத்துக்கு போதுமான சான்றாகும் என்று தெரிவித்தார். இது கேரளாவில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்.. பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை
போதைப்பொருள் ஜிஹாத்

இதனையடுத்து கேரள பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் ஜார்ஜ் குரியன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அந்த கடிதத்தில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களை சிக்க வைப்பதற்காக இஸ்லாமிய குழுக்களால் நடத்தப்படும் பல்வேறு வகையான ஜிஹாத் தொடர்பாக ரோமன் கத்தோலிக் பிஷப் மார் ஜோச் கல்லரங்கார் கூறிய குற்றச்சாட்டுக்களை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். கேரளாவில் ஜிஹாத் நடவடிக்கைகளை தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். குரியன் கடிதத்தை தொடர்ந்து, பா.ஜ.க. எம்.பி. கே.ஜே. அல்போன்ஸின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.