பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு விட்டது.. காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.

 

பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு விட்டது.. காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.

பாலகோட் தாக்குதலில் 300 பேர் உயிர் இழந்தனர் என்பதை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு விட்டது. ஆகையால் இந்த தாக்குதல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

2019 பிப்ரவரி 14ம் தேதியன்று காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ்சின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, அந்த மாதம் 26ம் தேதியன்று இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினர்.

பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு விட்டது.. காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.
ஹர்நாத் சிங் யாதவ்

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஆஹா ஹிலாலி டி.வி. விவாத நிகழ்ச்சியில், இந்திய விமான படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலில் 300 பேர் உயிர் இழந்தனர் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பாலகோட் தாக்குதல் குறித்த தவறான தகவல்களை பரப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு விட்டது.. காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.
காங்கிரஸ்

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2019ம் ஆண்டில் இந்தியா நடத்திய விமான படைத் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும்போது, எதிர்க்கட்சிகளும், காங்கிரசும் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கின்றன?. பாலகோட்டில் இந்தியா விமான படை தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் உள்ளே பயம் நிலவியது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் இந்தியாவின் வீரத்தை பாராட்டினர். ஆனால் அதேநேரம், காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் நமது ராணுவம் குறித்து கேள்வி எழப்பினர். போர் விமானங்கள் மரங்கள் மீது குண்டுகளை வீசி திரும்பி விட்டதாக அவர்கள் கூறினர். இப்போது காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.