மக்களே கொண்டாட்டத்தை தவிருங்க.. கோவா முதல்வர் சொன்ன சில மணி நேரத்தில் பார்ட்டிக்கு போன பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தனது உரையில், கொரோனா வைரஸ் நெருக்கடி சூழ்நிலையில், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களிடம் கூட பொதுமக்கள் சமூக விலகலை 2 மடங்கு அதிகரிக்க வேண்டும். இது போன்ற நேரங்களில், பிறந்தநாள் மற்றும் இதர விழாக்களுக்கு மக்களை அழைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். உங்க பக்கத்து வீட்டுகாரரின் உடல் நிலை விசாரிக்க கூட அவங்க வீட்டுக்கு போகாதீங்க என மிகவும் வலியுறுத்தினார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

முதல்வர் சாவந்த் பேட்டி அளித்த அடுத்த சில மணி நேரங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கிளென் சோசா டிக்லோ லாக்டவுன் பார்ட்டியில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கிளென் சோசா டிக்லோ பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோ இன்டர்நெட்டில் வெளியாகி கோவா முழுவதும் வைரலாகியது. அந்த வீடியோவில் டிக்லோ போனில் பேசுவதும், கைகுலுக்கி மக்களுக்கு கை அசைப்பதும் தெளிவாக தெரிகிறது. டிக்லோ தனது முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்தார். முதல்வரின் அறிவுரையை அடுத்த சில மணி நேரங்களில் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே மீறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிளென் சோசா டிக்லோ

இது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. டிக்லோ கூறுகையில், மிகவும் நெருக்கமானவர் அழைத்ததால் அந்த விருந்துக்கு சென்றேன். அங்கும் சில நிமிடங்கள்தான் இருந்தேன். இதனை மக்கள் பெரிய விஷயமாக ஆக்கிறார்கள். நான் சமுக விலகல் விதிமுறைகளை மிகவும் மதிக்கிறேன் என தெரிவித்தார்.முதல்வரின் அறிவுரையை சொந்த கட்சி எம்.எல்.ஏ.வே மதிக்காமல் பார்ட்டியில் கலந்து கொண்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் முதல்வர் சாவந்த் இது குறித்து கூறுகையில், நான் அது குறித்து விசாரிப்பேன் என தெரிவித்தார்.

Most Popular

விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. இந்த வழக்கை...

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ். அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்ய காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி...

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...