#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக: “அமித் ஷா PA-க்கு போன் அடிச்சா போதும்; மதக் கலவரம் ஆயிடும்” – அடாவடி செய்த பாஜக ‘நிர்வாகி’!

 

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக: “அமித் ஷா PA-க்கு போன் அடிச்சா போதும்; மதக் கலவரம் ஆயிடும்” – அடாவடி செய்த பாஜக ‘நிர்வாகி’!

திருவல்லிக்கேனியில் பாஜக நிர்வாகி ஒருவர் இலவசமாக சிக்கன்ரைஸ் கொடுக்காவிட்டால் அமித் ஷா பிஏ-க்கு போன் போட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்துவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் பிரியாணிக்கு அடுத்து சிக்கன் ரைஸே இடம்பிடித்துள்ளது. தற்போது அந்த சிக்கன் ரைஸுக்கு ஆபத்து வந்திருக்கிறது. ஏற்கனவே பிரியாணிக்கு ஆபத்து விளைவித்த அதே பாஜக தான் சிக்கன் ரைஸுக்கும் ஆபத்தாக மாறியிருக்கிறது.

திருவல்லிக்கேனி பாஜக பகுதிச் செயலாளர் (இப்படி ஒரு பதவி இருக்குனு இப்ப தான்யா தெரியும்) என்று கூறிக்கொள்ளும் ஒருவர் ‘ஓசி’யாக சிக்கன் ரைஸ் கொடுக்கவில்லை என்றால் மதக் கலவரத்தை ஏற்படுத்துவேன் என்ற ரேஞ்சில் ஹோட்டல் உரிமையாளரிடம் அடாவடி செய்திருக்கிறார்.

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக: “அமித் ஷா PA-க்கு போன் அடிச்சா போதும்; மதக் கலவரம் ஆயிடும்” – அடாவடி செய்த பாஜக ‘நிர்வாகி’!

முத்தையா தெருவில் இருக்கும் உணவகம் ஒன்றில், தமிழ்நாட்டில் பவரே இல்லாத பாஜகவின் பவரை வைத்து ஓசியாக சிக்கன் ரைஸ் கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்க, பகுதிச் செயலாளர் என்று கூறிக் கொண்டவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துள்ளது (இருக்காதா பின்ன, ஒரு தேசியக் கட்சி ஆளுனு ஒரு மரியாத வேணாம்).

இதுதொடர்பாக உலாவும் அந்த வீடியோவில், “திருவல்லிக்கேனி பகுதிச் செயலாளர் நானு. பிஜேபி ஆளுனு ஒரு மரியாத இல்லயா. மதக் கலவரம் ஆயிடும். ஆயிரம் பேர் ரெடியா இருக்காருனுங்க. இறக்கி காட்டவா. அமித் ஷா பிஏ-க்கு ஒரு போன் போட்டா போதும். கலவரம் ஆயிடும்” என்று வடிவேலு பாணியில் உளறிக் கொண்டிருக்கிறார்.

சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் அவரைச் சமாதானப்படுத்தியும் அவர் அங்கிருந்து நகராமல் எகிறிக் கொண்டே இருந்தார். ஆனால், உணவக உரிமையாளர் “உன்னால என்ன முடியுமோ, பண்ணிக்கோ” என்று கூறி நோஸ்கட் செய்துவிட்டார் (அசிங்கமா போச்சி குமாரு).

இதையனைத்தையும் பேசிமுடித்துவிட்டு அவர் கூறிய அந்த கடைசி வார்த்தை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய திருவாசகம். “இதெல்லாம் வீடியோ எடுக்காத ண்ணா நான் ஒன்னும் அவ்ளோ பெரிய ஆளு இல்ல” என்பதே அது. எப்படியோ உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார்.

”இத தாண்டா நானும் சொன்னேன்… நீ அவ்ளோ பெரிய ஆளு இல்ல… உனக்கு ஓசியா ரைஸ் கொடுக்க முடியாதுனு சொன்னேன்… அதுக்கு மரியாத இல்ல, மானம் இல்லனு சிங்கமுத்து மாரி குதித்திச்சிட்டு… கலவரம் ரேஞ்சுக்கு பேசிட்டிருக்கியே… சரக்க போட்டா படுத்து தூங்குங்கடா” என மனதுக்குள்ளேயே நினைத்து உணவக உரிமையாளர் நக்கலாக சிரித்திருப்பார்.

சமூக வலைதளங்களில் இதுதான் இப்போதைய ஹாட் டாபிக். #ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்-10இல் இருக்கிறது.

ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்துவரும் ரவுடிகள் பாஜகவில் இணைந்துகொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

அந்தத் தகவல் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். ”எப்படி ஆபிசர் இவங்கள வச்சி தான் நீங்க தாமரைய தமிழ்நாட்டுல மலர வைக்க போறீங்களா” என்றும் பங்கமாக கலாய்த்துவருகின்றனர்.

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக: “அமித் ஷா PA-க்கு போன் அடிச்சா போதும்; மதக் கலவரம் ஆயிடும்” – அடாவடி செய்த பாஜக ‘நிர்வாகி’!

சென்ற வருடம் திருப்பூரில் பாஜக ஆட்களிடமிருந்து பிரியாணி அண்டாவைக் காப்பாற்றக் கோரி உணவக உரிமையாளர்கள் மனு கொடுத்திருந்தனர்.

முன்னொரு காலத்தில் (2016) கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடலை எடுத்துச் செல்லும்போது ஆங்காங்கே சில கலவரங்கள் ஏற்பட்டன.

அந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி, சாலையோர பிரியாணி கடைகளில் தயார்செய்து வைத்திருந்த பிரியாணியை அண்டாவுடன் சில பாஜகவினர் திருடிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னணியில் இந்த மனுவைக் காவல் துறையினரிடம் உணவக உரிமையாளர்கள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக: “அமித் ஷா PA-க்கு போன் அடிச்சா போதும்; மதக் கலவரம் ஆயிடும்” – அடாவடி செய்த பாஜக ‘நிர்வாகி’!

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக என்ற ஹேஸ்டேக்கை போல அப்போது அண்டா_பிரியாணி_பாஜக என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகியது. வரலாறு முக்கியம் அமைச்சரே!

பின்குறிப்பு: வீடியோவில் கொச்சையான வார்த்தைகள் உபயோகிக்கப்படிருப்பதால் தளத்தில் வெளியிட இயலவில்லை. ஆட்சேபனை இல்லாதவர்கள் #ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக என்ற ஹேஸ்டேக்கை போட்டு சமூக வலைதளங்களில் பாஜக பகுதிச் செயலாளாரின் அந்த காமெடி கலந்த ஆன்மிக சொற்பொழிவைக் கேட்கலாம்.