பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் பாஜக படுதோல்வி!

 

பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் பாஜக படுதோல்வி!

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற்றது. ஆளுங்கட்சி என்பதால் பாஜகவே பெரும்பாலான ஜில்லா பஞ்சாயத்துகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் பாஜக படுதோல்வி!

எனினும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி மாவட்டமும் அயோத்தி நகரமும் மிக முக்கியவத்துவம் வாய்ந்த தொகுதிகளாகப் பார்க்கப்பட்டன. ஏனெனில் யோகி ஆதித்யநாத் இந்த இரு நகரங்களையும் மத சுற்றுலா மையமாக உருவாக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டன.

பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் பாஜக படுதோல்வி!

தேர்தல் முடிவுகளின்படி 40 ஜில்லா பஞ்சாயத்துகளைக் கொண்ட வாரணாசியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 15 இடங்களைக் கைப்பற்றியது. ஆளுங்கட்சியான பாஜக வெறும் 8 இடங்களை மட்டுமே வென்றது. அயோத்தியிலுள்ள 40 ஜில்லா பஞ்சாயத்துகளில் சமாஜ்வாடி கட்சி 24 இடங்களை வென்றுள்ளது. பாஜகவால் வெறும் ஆறு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. மீதமுள்ள 10 இடங்களில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஐந்து இடங்களையும் சுயேச்சைகள் ஐந்து இடங்களையும் பெற்றன.