மத்திய அமைச்சர் ரானே கைதுக்கு பதிலடி.. முதல்வர் உத்தவ் தாக்கரே எதிராக காவல் நிலையத்தில் பா.ஜ.க. புகார்

மத்திய அமைச்சர் ரானே கைதுக்கு பதிலடி.. முதல்வர் உத்தவ் தாக்கரே எதிராக காவல் நிலையத்தில் பா.ஜ.க. புகார்

மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் கைதுக்கு பதிலடியாக, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக காவல் நிலையத்தில் பா.ஜ.க.வினர் புகார் கொடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை செருப்பால் அடிப்பேன் என்று கூறியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை நேற்று முன்தினம் மாலை நாசிக் போலீசார் கைது செய்தனர். இருப்பினும், அன்று நள்ளிரவை நாராயண் ரானே பெயிலில் வெளியே வந்தார். ரானேவின் கைதுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் யுவ சேனா தலைவர் வருண் சர்தேசாய் ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் தனித்தனியாக 3 புகார்களை பா.ஜ.க.வினர் கொடுத்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ரானே கைதுக்கு பதிலடி.. முதல்வர் உத்தவ் தாக்கரே எதிராக காவல் நிலையத்தில் பா.ஜ.க. புகார்
முதல்வர் உத்தவ் தாக்கரே

2018ம் ஆண்டில் நடந்த தசேரா நிகழ்ச்சியில் கலந்த கொண்ட உத்தவ் தாக்கரே பேசுகையில், அவர் யோகியாக இருந்தால் அவர் எப்படி முதல்வராக முடியும்? அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு குகையில் அமர வேண்டும். அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தன்னை ஒரு யோகி என்று அழைக்கிறார் என்று பேசியிருந்தார். முன்பு சிவாஜி மகாராஜ் தொடர்பான நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அது குறித்து உத்தவ் தாக்கரே யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் ரானே கைதுக்கு பதிலடி.. முதல்வர் உத்தவ் தாக்கரே எதிராக காவல் நிலையத்தில் பா.ஜ.க. புகார்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

சிவாஜி மகாராஜின் புகைப்படத்துக்கு மாலை அணிவிக்கும்போது, அவர் (யோகி ஆதித்யநாத்) செருப்பு அணிந்திருந்தார். அவரை அதே செருப்பால் அடிக்க வேண்டும் என உணர்ந்தேன்.மகாராஜின் முன்னால நிற்க நீங்கள் யார்? என்று உத்தவ் தாக்கரே பேசியிருந்தார். தற்போது பா.ஜ.க.வினர் அதனை தூசி தட்டி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக உள்ளது.