இரண்டு சிங்கங்களை தேசிய ஜனநாயக கூட்டணி இழந்து விட்டது… பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா

 

இரண்டு சிங்கங்களை தேசிய ஜனநாயக கூட்டணி இழந்து விட்டது… பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஏற்கனவே சிவ சேனா வெளியேறிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியது அதனை குறிப்பிட்டு அந்த கூட்டணி 2 சிங்கங்களை இழந்து விட்டது என சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலி தளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு சிவ சேனா அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவின் தலையங்கத்தில், அகாலி தளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியதை குறிப்பிட்டு பா.ஜ.க. கூட்டணியை விமர்சனம் செய்துள்ளது. அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இரண்டு சிங்கங்களை தேசிய ஜனநாயக கூட்டணி இழந்து விட்டது… பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா
சிவ சேனா

பாதல்கள் வெளியேறும் போது அவர்களை தடுத்து நிறுத்த எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. முன்னதாக சிவ சேனாவும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்த இரண்டு கட்சிகளும் வெளியேறிய பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் எஞ்சியிருப்பது என்ன? இன்னும் அங்கே இருப்பவர்களுக்கு இந்துத்துவாவுடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆண்மையை குறிக்கின்றன. அகாலிதளம் மற்றும் சிவசேனா ஆகியவை இந்த ஆண்மையின் முகங்கள்.

இரண்டு சிங்கங்களை தேசிய ஜனநாயக கூட்டணி இழந்து விட்டது… பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா
சிரோன்மணி அகாலி தளம்

இரண்டு சிங்கங்களை (சிவ சேனா, சிரோன்மணி அகாலிதளம்) இழந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ராம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து முதலில் சிவ சேனா வெளியேறியது. தற்போது அகாலி தளம் வெளியேறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டு தூண்கள் வெளியேறிய பிறகு அது உண்மையில் இருக்கிறதா? தேசிய அளவில் காங்கிரசுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை வழங்குவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி பல ஆண்டுகளாக பல ஏற்ற தாழ்வுகளை கண்டது, மேலும் பல கட்சிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப அதிலிருந்து வெளியேறி விட்டன. இவ்வாறு அதில் தெரவிக்கப்பட்டுள்ளது.