நாங்கள் ஒருபோதும் ஆட்சியமைக்க மோசமான தந்திரங்களை பயன்படுத்தமாட்டோம்… பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி தகவல்..

நாங்கள் ஒருபோதும் ஆட்சியமைக்க மோசமான தந்திரங்களை பயன்படுத்தமாட்டோம்… பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி தகவல்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம் சரிவில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. நாங்கள் ஒருபோதும் ஆட்சியமைக்க மோசமான தந்திரங்களை பயன்படுத்தமாட்டோம் என பா.ஜ.க. தலைவர் உமா பாரதி தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் பிந்தில் ரூ.20 கோடிக்கும் மேல் வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அந்த விழாவில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உமா பாரதி பேசுகையில் கூறியதாவது:பா.ஜ.க. தொண்டர்கள் ஆட்சியில் அல்லது எதிர்க்கட்சியில் இருப்பதை வித்தியாசமாக உணரவில்லை.

நாங்கள் ஒருபோதும் ஆட்சியமைக்க மோசமான தந்திரங்களை பயன்படுத்தமாட்டோம்… பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி தகவல்..
உமா பாரதி

நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். காங்கிரஸ் அரசாங்கத்தின் சரிவில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. அவர்களிடம் உள்கட்சி தகராறு இருந்தது. அவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் போன்ற தலைவர்களை அவர்கள் அவமானப்படுத்தினர். நாங்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் வீழ்த்தவில்லை.

நாங்கள் ஒருபோதும் ஆட்சியமைக்க மோசமான தந்திரங்களை பயன்படுத்தமாட்டோம்… பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி தகவல்..
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது நான் சிவ்ராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம் மோசமான தந்திரங்களால் என்னால் அரசாங்கத்தை ஆட்சியை அமைக்க முடியாது என கூறினார். நாங்கள் ஒருபோதும் ஆட்சியமைக்க மோசமான தந்திரங்களை பயன்படுத்தமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.