அம்பேத்கர் வீடு மீதான தாக்குதல் அரசியலமைப்பு மற்றும் தலித்துகளின் மீதான தாக்குதல்.. பா.ஜ.க. தலைவர்

அம்பேத்கர் வீடு மீதான தாக்குதல் அரசியலமைப்பு மற்றும் தலித்துகளின் மீதான தாக்குதல்.. பா.ஜ.க. தலைவர்

இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வசித்த வீடு மும்பையில் தாதர் பகுதியில் உள்ளது. ராஜ்க்ருஹா என அழைக்கப்படும் அந்த வீடு 3 மாடிகளை கொணடது. அந்த வீட்டின் தரை தளத்தில் அம்பேத்கரின் தனிப்பட்ட உடைமைகள் வைக்கப்பட்டு அருங்காட்சியமாக செயல்படுகிறது. மேல் தளத்தில் அம்பேத்கரின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 2 பேர் அம்பேத்கர் வீட்டுக்குள் புகுந்து அங்கியிருந்த பூந்தொட்டிகளை உடைத்ததோடு, சி.சி.டி.வி. கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் வீடு மீதான தாக்குதல் அரசியலமைப்பு மற்றும் தலித்துகளின் மீதான தாக்குதல்.. பா.ஜ.க. தலைவர்

அம்பேத்கரின் வீடு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சேபிள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் அதை கடுமையாக கண்டிக்கிறேன். அரசியலமைப்பை உருவாக்கியவரின் வீடு மீதான தாக்குதல் அரசியலமைப்பு மீதான தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், தலித்துகளின் அடையாளத்தின் மீதான தாக்குதல். இதனை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது எங்கள் கோரிக்கை.

அம்பேத்கர் வீடு மீதான தாக்குதல் அரசியலமைப்பு மற்றும் தலித்துகளின் மீதான தாக்குதல்.. பா.ஜ.க. தலைவர்

மகாராஷ்டிராவில், தலித்துகளின் மீதான அட்டூழிய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருகின்றன. கடுமையான நடவடிக்கை இல்லாததால், சிதைந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாபா சாஹேப் அம்பேத்கரின் ராஜக்ரு (வீடு) தாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு விசாரணை குழுவை அமைத்து, இதற்கு பொறுப்பானர்களை விரைவில் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் டிவிட்டரில், அந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தார்.