காங்கிரஸ் என்பது தலைமை ஆசிரியரின் குழந்தை மட்டுமே முதலிடம் வகிக்கும் பள்ளி… பா.ஜ.க. தலைவர் கிண்டல்

காங்கிரஸ் என்பது தலைமை ஆசிரியரின் குழந்தை மட்டுமே முதலிடம் வகிக்கும் பள்ளி… பா.ஜ.க. தலைவர் கிண்டல்

காங்கிரஸ் கட்சிக்குள் கடித அரசியல் புயலை ஏற்படுத்திய நிலையில், அந்த கட்சியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கிண்டல் செய்துள்ளார். நேற்று நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, ரைஹான் வத்ரா மற்றும் மிராயா வத்ரா போன்ற பல தகுதி வாய்ந்த தலைவர்கள் (கட்சி தலைவர் பதவிக்கு) உள்ளனர்.

காங்கிரஸ் என்பது தலைமை ஆசிரியரின் குழந்தை மட்டுமே முதலிடம் வகிக்கும் பள்ளி… பா.ஜ.க. தலைவர் கிண்டல்
நரோட்டம் மிஸ்ரா

காங்கிரஸ் என்பது பள்ளி போன்றது, அங்கு தலைமை ஆசிரியரின் குழந்தை மட்டுமே முதலிடம் வகிக்கும் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ரைஹான் வத்ரா மற்றும் மிராயா வத்ரா ஆகியோர் பிரியங்கா காந்தியின் குழந்தைகள். காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமை பதவிக்கு வர முடியும் என்பதை நரோட்டம் மிஸ்ரா மறைமுகமாக கிண்டலாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் என்பது தலைமை ஆசிரியரின் குழந்தை மட்டுமே முதலிடம் வகிக்கும் பள்ளி… பா.ஜ.க. தலைவர் கிண்டல்
காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் 20க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் அண்மையில், கட்சிக்கு முழு நேர தலைவர் வேண்டியும், கட்சியில் சீர்திருத்தங்கள் கோரியும், கட்சியின் நிலைமை மற்றும் போய்க்கொண்டிருக்கும் பாதை குறித்து கேள்வி எழுப்பியதோடு, காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் கோரியும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக ராகுல் காந்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக செய்தி வெளியானது. நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்.