விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார்… பா.ஜ.க. தாக்கு

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார்… பா.ஜ.க. தாக்கு

பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கக்கூடாது, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புவதாக பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் விதான் சபாவில் (சட்டப்பேரவை) மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றவை. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் ஒரு சில நிறுவனங்களின் கைகளில் இருக்கும் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார்… பா.ஜ.க. தாக்கு
அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று மீனாட்சி லேகி கூறியதாவது: விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், அவர்களின் பயிர்களுக்கு ஒரு போதும் சிறந்த விலை கிடைக்கக்கூடாது என்றும் அவர்களின் நிலை தொடர்ந்து மோசமடைந்து விட வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார்… பா.ஜ.க. தாக்கு
மீனாட்சி லேகி

இடைத்தரகர்களையும், அவர்களின் ஊழல் நடைமுறைகளையும் ஒழிக்க வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் ஜி இந்த இடைத்தரகர்களுக்கு ஆதரவாக பேச விரும்புகிறார். அவர் நம் நாட்டின் நலனுக்காவோ, விவசாயிகளின் நலனுக்காகவோ செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ஜியின் கருத்துக்கள் விசாரக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.