அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்க ஸ்டாலின் எதிர்ப்பது நவீன தீண்டாமை- பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

 

அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்க ஸ்டாலின் எதிர்ப்பது நவீன தீண்டாமை- பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ளதால் தமிழக பிரதான கட்சிகள் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்து விட்டன. அரசியல் கட்சிகள் பிரதான கட்சிகளின் மீது மாறி மாறி குற்றச்சாட்டுகளையும் அடுக்கிவருகின்றனர்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக பா.ஜ. அறிவுசார் பிரிவு சார்பில் “எண் எழுத்து இகழேல்” என்ற கருத்தரங்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரும், கட்சியினரும் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்க மாட்டோம் என அறிவிக்க தயாரா? அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்க ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?. ஓட்டு வங்கிக்காக ஏழை எளிய மக்களை பயன்படுத்துவதற்காகவே மும்மொழிக் கொள்கையை சிறந்த தலைவராக இருக்க கூடிய ஸ்டாலின் எதிர்க்கிறார்.

அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்க ஸ்டாலின் எதிர்ப்பது நவீன தீண்டாமை- பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

மாணவர்கள் இன்னொரு மொழியை கூடுதலாக கற்பிப்பதை சுயநலத்துக்காக ஸ்டாலின் எதிர்க்கிறார். நல்ல விஷயத்தை நீங்கள் செய்யமாட்டீர்கள். அதனால் மத்திய அரசு செய்வதை தடுக்காதீர்கள். தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இன்னொரு மொழியை படிக்கவிடாமல் நவீன தீண்டாமை பின்பற்றப்படுகிறது.” என தெரிவித்தார்.