தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் சந்திப்பால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.. சிவ சேனாவை நம்ப முடியாது- காங்கிரஸ்

 

தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் சந்திப்பால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.. சிவ சேனாவை நம்ப முடியாது- காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் சந்தித்து பேசியது அம்மாநில அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிவ சேனா நம்பதகுந்தல்ல என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸை ஒரு ஆடம்பர ஹோட்டலில் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அம்மாநில அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பியது.

தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் சந்திப்பால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.. சிவ சேனாவை நம்ப முடியாது- காங்கிரஸ்

சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ் உடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை, சாம்னாவுக்காக பேட்டி கேட்டுதான் அவரிடம் பேசினேன். எங்களுடைய சித்தாங்கள் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எதிரி அல்ல. நாங்கள் இருவரும் சந்தித்தது உத்தவ் தாக்கரேவுக்கு தெரியும் என தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் உடனான சந்திப்பு குறித்து கூறுகையில், சிவ சேனாவின் ஊதுகுழலான சாம்னாவுக்காக எனது பேட்டி வேண்டும் சஞ்சய் ரவுத் ஜி விரும்பினார். அது குறித்துதான் நாங்கள் பேசினோம். எனது பேட்டியை எடிட் செய்யாமல் வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்தேன்.

தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் சந்திப்பால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.. சிவ சேனாவை நம்ப முடியாது- காங்கிரஸ்

அந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை. கூட்டணி குறித்து விவாதிக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லை. அரசு செயல்படும் விதத்தால் மக்கள் கோபத்தில் உள்ளனர். நாங்கள் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். அரசு கவிழும் நாளில், எப்படி மாற்று அரசு அமைப்போம் என்பதற்கு நாங்கள் பதில் அளிப்போம். ஆட்சியமைக்க நாங்கள் அவசரப்படவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது அதிகாரப்பூர்வ வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அவர்கள் எது குறித்து பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த சூழ்நிலையில், சிவ சேனா நம்பதகுந்தல்ல என காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் கூறியிருப்பது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.