“வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது”- எல்.முருகன்

 

“வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது”- எல்.முருகன்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரை நடக்கும் என கூறிய எல்.முருகன் சென்னையில் இருந்து இன்று காலை திருத்தணி புறப்பட்டு சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரிடம், முருகனை தரிசிப்பது எனது உரிமை என பதில் அளித்து விட்டு சென்றார் எல்.முருகன்.

“வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது”- எல்.முருகன்

இதையடுத்து திருத்தணியில் வேலுடன் சாமி தரிசனம் செய்த எல்.முருகன், அங்கிருந்து வேல் யாத்திரையில் பங்கேற்க முயன்றார். சென்னையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போதே, தடையை மீறி வேல் யாத்திரையில் கலந்து கொண்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்த பிறகு தான் திருத்தணி செல்ல அனுமதி வழங்கினர். அதனை மீறி எல்.முருகன் யாத்திரையில் பங்கேற்க முயன்றதால், அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

“வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது”- எல்.முருகன்

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், ‘வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது. தடையை மீறி தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும்’ என தெரிவித்தார். இதன் மூலம் நாளையும் வேல் யாத்திரை மேற்கொள்ள பாஜக முயற்சிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.