“ஏமாத்துறதுக்கு திமுக கிட்ட இருந்து தான் கத்துக்கணும்”

 

“ஏமாத்துறதுக்கு திமுக கிட்ட இருந்து தான் கத்துக்கணும்”

மக்களை ஏமாற்றுவது எப்படி என்பதை திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் சூழலில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல அறிவிப்புகளை முதலில் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது அறிவித்தார். இந்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி செய்தே காட்டி விட்டார். சட்டப்பேரவையிலேயே கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், அதற்கான பணிகளையும் தீவிரப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

“ஏமாத்துறதுக்கு திமுக கிட்ட இருந்து தான் கத்துக்கணும்”

இதைத் தொடர்ந்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஸ்டாலின் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது எப்படி சாத்தியாமாகுமென எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், திமுகவின் அறிவிப்புகள் குறித்து சென்னை கோயம்பேட்டில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“ஏமாத்துறதுக்கு திமுக கிட்ட இருந்து தான் கத்துக்கணும்”

அப்போது, திமுக அறிவிப்பு எல்லாம் ஏமாற்று வேலை. திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருகிறார் என விமர்சித்தார்.

இதையடுத்து, விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தரப்படும் என்ற அறிவிப்பை எப்படி நிறைவேற்றுவார் என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய அவர், ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்தார்.