“பாஜகவில் ஏ டீம், பீ டீம் எல்லாம் கிடையாது” – எல்.முருகன் பேட்டி!

 

“பாஜகவில் ஏ டீம், பீ டீம் எல்லாம்  கிடையாது” – எல்.முருகன் பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக பாஜக அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் போடப்பட்ட கூட்டணி, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டது. பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே ஏகப்பட்ட மோதல் போக்கு நீடித்து வந்த நிலையிலும், கூட்டணி உறுதி செய்யப்பட்டது உற்று நோக்கப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தான் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்ற நிர்பந்தம் பாஜகவுக்கு நிலவுகிறது. அதனால் தான் இந்த கூட்டணி தொடருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

“பாஜகவில் ஏ டீம், பீ டீம் எல்லாம்  கிடையாது” – எல்.முருகன் பேட்டி!

அதிமுக – பாஜக இடையே ஒருமித்த கருத்துக்கள் இல்லாதது அவ்வப்போது கட்சி நிர்வாகிகளின் பேச்சில் தென்படுகிறது. நேற்று பேசிய எல்.முருகன், முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என கூறியது அதிமுக மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. இதே போன்ற எதிர்மறைக் கருத்துக்களை எல்.முருகன் கூறி வந்தால், தனியாக பாஜக போட்டியிட வேண்டியது தான் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

“பாஜகவில் ஏ டீம், பீ டீம் எல்லாம்  கிடையாது” – எல்.முருகன் பேட்டி!

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன் என தெரிவித்தார். மேலும், பாஜகவில் ஏ டீம் மற்றும் பீ டீம் எல்லாம் கிடையாது என்றும் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.