திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது – பாஜக எல்.முருகன் கடும் விமர்சனம்!

 

திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது – பாஜக எல்.முருகன் கடும் விமர்சனம்!

தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளன. பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாது இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளை அரசு மீண்டும் திறப்பது எதிர்ப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில், கொரோனோ பாதிப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கண்டனக் குரலை எழுப்பினார்.

திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது – பாஜக எல்.முருகன் கடும் விமர்சனம்!

அச்சமயம் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவை தற்போது வைரலாக்கும் நெட்டிசன்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்த மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவரே டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் திறப்பு விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் திறப்பை எதிர்த்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் எல்.முருகன், ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலை; ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோல் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.